தென்னிலங்கையில் மனைவிக்கு கணவன் கொடூரம்

#image_title

களுத்துறையில் 28 வயது மனைவியை கொடுமைப்படுத்திய 44 வயது கணவனை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 14 ஆம் திகதி கணவர் மனைவியின் அந்தரங்க பகுதியில் சூடான கம்பியினால் சூடு நடத்திய போதிலும் பயந்து அதைப் பற்றி யாரிடமும் சொல்லாமல் மறைத்துள்ளார்.

இதனை அறிந்து கொண்ட கணவனின் தந்தை பொலிஸ் சேவையான 119 இற்கு தகவல் வழங்கியுள்ளார். சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் துணை பரிசோதகர் விஜயரத்ன விசாரணை மேற்கொண்டார்.1990 சுவசேரிய அம்பியுலன்ஸில் பெண்ணை களுத்துறை, நாகொட போதனா மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சந்தேக நபரான கணவன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version