உலகம்

டிஜிட்டல் விசா முறை அறிமுகப்படுத்திய முக்கிய நாடு

ஜேர்மனியில் (Germany) டிஜிட்டல் விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜேர்மன் அரசாங்கம் அதன் Consular Services Portal-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள விண்ணப்பதாரர்கள் விசா விண்ணப்பங்களை நிகழ்நிலையில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய டிஜிட்டல் விசா முறை ஜேர்மனியில் வேலை, கல்வி மற்றும் பயிற்சிக்கான விசாக்களை விரைவாக அனுமதிக்க உதவுகின்றது

ஜேர்மனியில் தொழிலாளர்களுக்கான கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு குறைந்தது 400,000 திறமையான பணியாளர்கள் தேவைப்படுவதாக வெளியுறவு அமைச்சர் அனலேனா பேயர்போக் தெரிவித்துள்ளார்.

சமூக பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து உறுதிப்படுத்துவதற்காக அதிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய டிஜிட்டல் விசா முறைமை விரைவாகவும் எளிமையாகவும் உலகளாவிய திறமையான பணியாளர்களுக்கு ஜேர்மனியில் வேலை வாய்ப்புகளைத் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *