விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் நிகழ்ச்சி. நிகழ்ச்சியின் முதல் ஏழு சீசன்களையும் உலகநாயகன் கமலஹாசனும், எட்டாவது சீசனை விஜய் சேதுபதியும் தொகுத்து வழங்கி இருந்தனர். அக்டோபர் ஆறாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஜனவரி 19தேதி நிறைவுக்கு வந்தது.
விஜய் டிவியில் மாபெரும் வெற்றி பெற்ற ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சி 8 சீசன்களை கடந்து வந்த நிலையில், இனி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் என தகவல்கள் கசிந்துள்ளது. ஜியோ மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் இணைந்த நிலையிலேயே பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் டிவியை அம்பானியின் லியோ நிறுவனம் வாங்கியுள்ளது. ஹாஸ்டர் ஓடிடி தளம் ஜியோ ஹாஸ்டர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அம்பானிக்கு சொந்தமாகவே கலர்ஸ் என்ற சேனலும் உள்ள நிலையில் விஜய் டிவியில் உள்ள பெரும்பாலான படங்கள் இனி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பப்பட உள்ளதாகவும், நிகழ்ச்சிகளும் இனி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் கலர்ஸ் தமிழில் பிப்ரவரி 23ஆம் தேதி இருந்து தினசரி ஏழு மணிக்கு இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்பதாவது சீசனும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.