ராஜபக்ச தரப்பால் மரபுரிமையாகப் முன்னெடுக்கப்பட்ட கொலைகளே நாட்டில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சாட்சியங்களை இல்லாதொழித்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். மித்தெனியவில் நடந்த இரட்டைக் கொலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே கூறியுள்ளார்.
மேலும் மித்தெனியவில் நடந்த இரட்டைக் கொலை தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். சம்பவத்தில் உயிரிழந்தவர், ராஜபக்ச குடும்பத்துடன் ஏற்பட்ட முறிவு காரணமாக, சில உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். இந்த கொலை தொடர்பில் விரிவான விசாரணையைத் தொடங்க வேண்டும்.
கொலைகளுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது அவசியம். சாட்சிகளைக் கொல்வது ஒரு கலாச்சாரமாகிவிட்டது. குற்றச்செயல்களின் சாட்சிகளைக் கொல்வது சட்டத்துறைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. லசந்த விக்ரமதுங்க, தாஜுடின், எக்னலிகொட போன்றோர் தொடர்பான வழக்குகளில் உள்ள ஆதாரங்கள் இவ்வாறே மறைக்கப்பட்டன. ராஜபக்ச தரப்பால் மரபுரிமையாக முன்னெடுக்கப்பட்ட கொலைகள்” என்றார்.