கணேமுல்ல சஞ்சீவ விவகாரம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபரான செவ்வந்தி என்றப் பெண் கடந்த 3 மாதங்களாக வீட்டிற்கு வரவில்லை என்று பாட்டி தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிடம் குறிப்பிடும் போது, செவ்வந்தி என்னுடை மகளின் மகள். என்னுடை பேர்த்தி. கடந்த மூன்று மாதங்களாக வீட்டிற்கு வரவில்லை. வீட்டில் நான் எனது மகள்(செவ்வந்தியுடைய அம்மா) மற்றும் அவரது மகன்(செவ்வந்தியுடைய தம்பி) ஆகியோர் வசித்து வருகின்றோம். எமது வீட்டிற்கு வந்த பொலிஸார் செவ்வந்தியுடைய தம்பியை வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக மினுவாங்கொட பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
வெளிவந்த செய்திகளின் ஊடாகவே சம்பவத்தை நான் அறிந்து கொண்டேன். எனது பேத்தி கடந்த மூன்று மாதங்களாக வீட்டிற்கு வரவில்லை. போதைப்பொருள் வியாபாரம் மேற்கொண்டதற்காக அவர் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.