ரணிலுக்கு தயாராகும் ஆசனம்

#image_title

ரணில் விக்ரமசிங்க இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட உள்ளதாகத் எதிர்கட்சி வட்டாரடங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி விலகுவதன் ஊடாக ரணிலுக்கான நியமனம் கிடைக்கப்பெறும் என தெரிக்கப்படுகிறது.

எதிர் கட்சிகளுடன் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, எதிர்க்கட்சியில் உள்ள பல எம்.பி.க்களும் அவருடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. கட்சிகள் ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றத்திற்கு வருமாறு பரிந்துரைத்துள்ள நிலையில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version