நீர்கொழும்பு துப்பாக்கிச் சூட்டு முயற்சி

#image_title

நீர்கொழும்பு பிரதேசத்திற்கு நேற்று (21) பிற்பகல் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரைச் சுட்டுக் கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிதாரிகளிடம் இருந்த துப்பாக்கி செயலிழந்ததினால் கொலை முயற்சி தோல்வியடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சமிந்த ஹெவத் மிரிஸ் அந்தனி என்பவரின் மூத்த மகனை இலக்கு வைத்தே துப்பாக்கிச் சூட்டு முயற்சி இடம்பெற்றுள்ளது. படுகொலை செய்யப்பட்ட பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரின் நெருங்கிய நண்பரான “கமாண்டோ சாலிந்த” என்பவரின் தலைமையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version