பாரீஸ் ஒப்பந்தம் என்னும் பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், பல முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார் ட்ரம்ப்.
பாரீஸ் ஒப்பந்தம் என்னும் பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவது தொடர்பான ஆவணமும் ஒன்று.
பாரிஸ் ஒப்பந்தம் என்பது காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்குச் சட்டப்பூர்வமாக கையொப்பமிட்டவர்களைக் கட்டுப்படுத்தும் சர்வதேச ஒப்பந்தமாகும். 2015 ஆம் ஆண்டு முதல் முறையாக, புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்தவும் தாக்கங்களை நிவர்த்தி செய்யவும் ஒரு பெரிய கூட்டு முயற்சிக்கு அரசாங்கங்கள் கூட்டாக ஒப்புக்கொண்டன.
ட்ரம்ப் 2017ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். 2021ஆம் ஆண்டு ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், அமெரிக்கா பாரீஸ் ஒப்பந்தத்தில் இணைந்தது.
தற்போது இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ட்ரம்ப், தான் பதவியேற்ற சிற்து நேரத்திலேயே, மீண்டும் பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவது தொடர்பான ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.