மட்டக்களப்பில் குழந்தையை பெற்று வீசிய மாணவி கைது

#image_title

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய 18 வயது மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். மட்டு தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு (Batticaloa) போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய குழந்தை காப்பாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. சம்பவம் இன்று (23) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேசம் ஒன்றை சேர்ந்த உயர் தரத்தில் கல்வி கற்றுவரும் 18 வயதுடைய மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று அதிகாலை குழந்தையை பெற்று மலசலகூட யன்னலில் வீசியதாகவும் பின்னர், தாதியர் குழந்தையை மீட்டு சிகிச்சையளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருதாக குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version