கணேமுல்ல சஞ்சீவ கொலை: அமைச்சர் அறிவிப்பு

#image_title

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதித்துறையை சேர்ந்த அதிகாரிகள் விசாரிக்கப்படுவார்கள் என சுகாதாரம் வெகுசன ஊடக அமைச்சர் மற்றும் அரசாங்கத்தின் பிரதம கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், பாதுகாப்புப் படைகள் மற்றும் பொலிஸ் உடன் தொடர்புடைய சிலரை நாங்கள் ஏற்கனவே கைது செய்துள்ளோம். அரசாங்கம் சம்பவத்தை இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைக்கப் பெற்ற பின் அது குறித்து நடவடிக்கைகளை எடுக்க முறையான திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version