இஷாரா செவ்வந்தியின் தாய் தம்பி கைது

#image_title

கனேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த 23 வயதான பிங்புர தேவகே சமிது திவங்க மற்றும் அதே முகவரியைச் சேர்ந்த 48 வயதான சேசத்புர தேவகே சமந்தி ஆவர்.

கைது செய்யப்பட்டவர்கள் இந்தக் குற்றத்திற்கு உதவிய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணின் தாயார் மற்றும் தம்பி என்பதும் தெரியவந்துள்ளது. கொலை குறித்து அறிந்திருந்தும், குறித்த தகவலை மறைத்து, குற்றத்திற்கு உதவியதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றத்துடன் தொடர்புடையதாக இதுவரை 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Exit mobile version