முடி வளர்ச்சி மும்மடங்கு அதிகரிக்க வேண்டுமா..!

#image_title

நீளமான கூந்தலை தான் பெண்களும் விரும்புபவர்கள். முடி உதிர்வு என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் இருக்கும் பிரச்சனையாகும். முடி வளரவில்லை என்றாலும் கூட பரவாயில்லை ஆனால் முடி உதிர்வு மட்டும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

மன அழுத்தம், மரபணு பரிமாற்றம் மற்றும் ஒழுங்கற்ற தலை முடி பராமரிப்பு இதுபோன்ற காரணங்கள் தான் தலை முடி உதிர்வு பிரச்சினைக்கு வழிவகுக்கிறது. முடி உதிர்வை நிறுத்தி நீளமான கூந்தலுக்கு ஆமணக்கு எண்ணெய் ஒன்று போதும். ஆமணக்கு எண்ணெயில் உள்ள ரிசினோலிக் அமிலம் உச்சந்தலையிலும் தோலிலும் ஆழமாக ஊடுருவி வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.

ஆமணக்கு எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து உச்சந்தலையில் வாரம் இருமுறை மசாஜ் செய்யவும். ஆமணக்கு எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் 2 வைட்டமின் ஈ மாத்திரைகள் கலந்து தடவினால் முடி உதிர்வது தடுக்கப்படும். ஆலிவ் எண்ணெய், மிளகுக்கீரை எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து முடியில் தடவி 1 மணி நேரம் கழித்து முடியை அலசவும்.

வெங்காயச் சாறு, ஆமணக்கு எண்ணெய் சேர்த்து 2 வைட்டமின் ஈ மாத்திரைகளை கலந்து பருத்தி துணியால் உச்சந்தலையில் தடவி 1மணி நேரம் கழித்து கழுவவும். ஆமணக்கு எண்ணெய் உச்சந்தலையில் உள்ள இயற்கை எண்ணெய்களை சீராக்கவும், ரசாயனங்களால் சேதத்தை சரிசெய்யவும் உதவுகிறது.

Exit mobile version