ஐரோப்பாவில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்

#image_title

இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த ஸ்பெயின்(Spain) பெண் ஒருவர் தவறவிட்ட பணப்பையை உரியவரிடம் ஒப்படைக்க இளைஞன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பையை பெண் ஒருவர் எடுத்து செல்ல முயற்சித்ததனை அவதானித்த ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் பூ வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இளைஞன் பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் பணப்பையை வெளிநாட்டுப் பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார்.

பணப்பையில் 810 யூரோக்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஸ்பெயின் பெண்ணுக்கு சொந்தமான பல வங்கி அட்டைகளும் அதில் காணப்பட்டுள்ளன.

ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள பூக்கடை அருகே வெளிநாட்டுக் குழு பயணித்து கொண்டிருந்தபோது, அந்தப் பெண்ணின் பணப்பை தரையில் விழுந்துள்ளது., அதை அறியாமல், அந்தப் பெண் குழுவுடன் பேருந்தை நோக்கி பயணித்துள்ளார்.

பணப்பையை எடுத்த ஒரு பெண் அதை எடுத்துக்கொண்டு ஓட முயன்ற போது, பூ விற்கும் தினேஷ் குமார என்ற இளைஞன் அவரை துரத்திச் சென்று பிடித்துள்ளார்.

பணப்பையை பெற்ற பிறகு, அவர் ஸ்ரீ தலதா மாளிகை பொலிஸ் தலைமை ஆய்வாளரிடம் அதை ஒப்படைத்தார்.

செயல்பட்ட அதிகாரிகள் குயின் ஹோட்டலுக்கு அருகில் சுற்றுலா வழிகாட்டிகளின் உதவியுடன், குறித்த வெளிநாட்டுக் குழுவை அடையாளம் கண்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Exit mobile version