நாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் இரண்டாம் தொகுதி

#image_title

ஜப்பானிலிருந்து இரண்டாம் தொகுதி பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஐந்து ஆண்டு காலமாக நிலவிய வாகன இறக்குமதி தடை தளர்த்தப்பட்டுள்ளது.

முதல் தொகுதி தாய்லாந்திலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. தனிநபர் பாவனைக்காக விற்பனை செய்யப்படவுள்ள குறித்த வாகனங்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக, வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.

இறக்குமதி செய்யப்பட்டுள்ள “டபள்கெப்” ரக வாகனங்கள் உள்நாட்டுச் சந்தையில் 24.5 மில்லியன் ரூபாய் முதல் 25.5 மில்லியன் ரூபா வரையிலான விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  மார்ச் மாத இறுதிக்குள் 4000 வாகனங்களை இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக  இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிங்சிகே தெரிவித்தார்.

Exit mobile version