சினிமா

மணிமேகலை என் தங்கச்சி – தொகுப்பாளினி அஞ்சனா

சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொகுப்பாளினிகளில் ஒருவர் அஞ்சனா. சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கி இப்போது மக்கள் மனதில் இடம் பிடித்தவர் அஞ்சனா. இவர் கயல் பட புகழ் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார், ஒரு மகன் உள்ளார்.

திருமணம், குழந்தை பிறகு செம பிட்டாக சின்னத்திரை பயணத்தை துவங்கி கலக்கி வருகிறார். தொகுப்பாளினி அஞ்சனா, மணிமேகலை தனது தங்கை என அனைவரும் கேட்ட விஷயம் குறித்து பேசியுள்ளார்.

நீங்களும், மணிமேகலையும் சகோதரிகளா என்பார்கள், நான் இல்லைங்க என்று சொன்னால் நம்ப மாட்டார்கள். உங்ககை பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது, நீங்கள் எதற்காக பொய் சொல்லுறீங்க என்று கேட்கிறார்கள். ஆமா மணிமேகலை என்னுடைய தங்கச்சி தான் என்று நானே சொல்லி இருக்கிறேன். எனது வாழ்க்கையில் அப்பா இறப்பிற்கு பிறகு குடும்பத்தை சுமந்து செல்லும் பெரிய சுமை என்னை நோக்கி வந்தது. தாங்கிக் கொண்டு என்னுடைய திருமண வாழ்க்கையில் அதிலும் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *