12 ஆண்டுகளின் பின் சுந்தர்சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகிய மதகஜராஜா திரைப்படம் வசூலை அள்ளி குவித்து வெற்றியடைந்தது. உடனே இருவரும் மீண்டும் இணைவதாக சுந்தர்சி மேடை ஒன்றில் கூறியிருந்தார். இதற்கு விஷாலும் ஓகே சொல்லியிருந்தார்.
தற்போது மூக்குத்தி அம்மன் வேளைகளில் மிகவும் பிஸியாக இருந்து வரும் சுந்தர்சி விஷால் படம் தொடங்குவதற்கு இன்னும் முயற்சிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் விஷால் சம்பளங்களை அதிகம் கேட்பதால் தயாரிப்பாளர்கள் யாரும் உடன்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
ஒரு மாதம் மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பை முடித்து இடையில் விஷால் படத்தை இயக்க தீர்மானித்திருந்த இயக்குநர் பின்வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. மற்றும் மூக்குத்தி அம்மன் படத்தில் முன்னணி நடிகர் அருண் விஜய் அவர்களை நயன்தாராவிற்கு வில்லனாக களமிறக்க சுந்தர்சி தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுள்ளது.