ஜெலென்ஸ்கிக்கு பெரு ஆதரவு!

#image_title

உக்ரேனிய ஜனாதிபதி வோளோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு ட்ரம்புடன் ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து, பல்வேறு தரப்புகளில் ஆதரவு அளிக்கப்பட்டு வருகின்றது.அமெரினக்காவின் ஓவலில் உள்ள வெள்ளை மாளிகையில் ட்ரம்பினை நேரில் சந்தித்த ஜெலென்ஸ்கி, போர் நிறுத்தம் குறித்த முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

ஏற்பட்ட வாக்குவாத்திற்கு பின்னர் அங்கிருந்து அவர் வெளியேறியிருந்ததுடன் அமெரிக்காவுக்கு நன்றி தெரிவிப்பதாக பதிவு ஒன்றினையும் இட்டிருந்தார். உக்ரைனுக்கு தமது ஆதரவினை வெளிப்படுத்தும் வகையிலும் அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலும் பல்வேறு சர்வதேச தலைவர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

முதலாவதாக ஆதரவினை வெளிப்படுத்திய போலந்து பிரதமர், “அன்புக்குரிய ஜெலென்ஸ்கி மற்றும் உக்ரேனிய நண்பர்கள், நீங்கள் தனியாக இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.   பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பிரமுகர்களும் உக்ரைனுக்கு ஆதரவினை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version