கச்சத்தீவு திருவிழாவிற்கான திகதிகள் அறிவிப்பு

#image_title

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா நடைபெறவுள்ள திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மார்ச் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் திருவிழா நடைபெறவுள்ளது.

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கு இலங்கை கடற்படை மனிதவளம், தொழில்நுட்பம் மற்றும் வளங்களை பங்களிக்கிறது என கூறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்கு பகுதியில் சுமார் 64 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கச்சத்தீவு தீவில் நடைபெறும்.

தேவாலயம் நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது. 1.15 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த சிறிய தீவு, இலங்கையிலிருந்து மிகத் தொலைவில் உள்ள தீவாகவும், இலங்கைத் தீவுக்கூட்டத்தில் இந்தியாவிற்கு மிக அருகில் உள்ள தீவாகவும் கருதப்படுகிறது.

Exit mobile version