டொலரின் பெறுமதி எகிறும் எச்சரிக்கை

#image_title

டொலரின் பெறுமதி உயர்வடையும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸாநாயக்க(Chamara Sampath Dassanayaka) எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்நிய செலாவணி கையிருப்பு தற்பொழுது 5.7 பில்லியன் டொலர்களாக குறைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் டொலர் கையிருப்பு 300 மில்லியன்களினால் குறைவடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதமளவில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 310 ரூபாவாக உயர்வடையும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். காலப் பகுதியில் டொலர் கையிருப்பு மேலும் 200 மில்லியன் டொலர்களினால் குறைவடையும் என சாமர சம்பத் தஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போது இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version