ஜனாதிபதி செயலக வாகனங்கள் விற்பனை

#image_title

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 14 சொகுசு வாகனங்கள், 6 பழைய வாகனங்கள் வாகன உதிரிப்பாகங்கள் ஆகியன ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. அரச செலவுகளை குறைக்கும் மற்றும் நிதி பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில், இந்த வாகனங்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டது. ஏலத்தில் விற்பனையாகிய வாகனங்கள் விற்பனையாகிய வாகனங்கள்:

• 9 டிஃபெண்டர் ஜீப் ரகங்கள் • 1 வோல்வோ ஜீப் • 1 கிரைஸ்லர் மோட்டார் கார் • 1 மகேந்திரா போலேரோ • 1 ரோசா பஸ் • 1 டிஸ்கவரி • 1 டொயோட்டா மோட்டார் கார்

ஏலத்தில் விற்பனை செய்யப்படாத மற்ற வாகனங்களுக்கான ஏலம் விரைவில் நடத்தப்படும். ஜனாதிபதி செயலக அதிகாரிகள் பயன்படுத்திய வாகனங்கள் அல்ல, மாறாக முன்னாள் ஜனாதிபதி தனது பதவிக்காலத்தில் அமைச்சரவையின் 41(1) பிரிவின் கீழ் நியமித்த ஆலோசகர்கள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்திய வாகனங்கள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மொத்தம் 199 வர்த்தகர்கள் ஏலத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version