வெளிநாடொன்றில் இலங்கைத் தாதியர்களுக்கு வேலைவாய்ப்பு

#image_title

ஜப்பானில் தாதியர்களாக பணியாற்றுவதற்கு இலங்கையர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் ஜப்பானிய நிறுவனம் ஒன்றிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைய வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

18 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு இந்த வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. 5 வருடங்களுக்கு தாதியராக பணியாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வேலைவாய்ப்பின் ஊடாக 4 இலட்சம் ரூபாவினை வருமானமாகப் பெற முடியும் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version