எரிபொருள் தட்டுப்பாடு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

#image_title

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வாரம் எரிபொருள் பற்றாக்குறை இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் கூறியதை மறுத்துள்ள எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம், வெள்ளிக்கிழமை முதல் எந்த எரிபொருள் ஓர்டர்களும் கிடைக்கப்பெறவில்லை என்று தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை (02.28) காலை 10 மணிக்கு முன்பு 1,581 ஓர்டர்கள் கிடைக்கப்பெற்றதாக சங்கம் ஒப்புக்கொண்ட போதும் அதன் பிறகு புதிய ஓர்டர்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.நிரப்பு நிலையங்களில் தற்போதுள்ள எரிபொருள் இருப்பு திங்கள்கிழமை வரை நீடிக்கும் என்றும் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

வார இறுதியில் சில எரிபொருள் நிலையங்கள் எரிபொருள் பெற்றிருந்தாலும், பெரும்பாலான எரிபொருள் நிலையங்கள் தங்களிடம் இருப்பு இல்லை என்று அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. அரச நிறுவனங்களுக்கு பணம் செலுத்திய பிறகு எரிபொருள் விநியோகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

பொலிஸ் மற்றும் மருத்துவமனைகள் போன்ற நிறுவனங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குப் பிறகு பணத்தை செலுத்த அனுமதிக்கப்பட்டன, வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கடனில் எரிபொருள் வழங்கப்படாது என விநியோகஸ்தர்கள் எச்சரித்துள்ளனர்.

Exit mobile version