ஜெலென்ஸ்கியின் சொத்து மதிப்பு

#image_title

ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொத்து மதிப்பு 30 மில்லியன் டொலர் என கணக்கெடுக்கப்பட்டுள்ளது. காலங்களில் ஜெலென்ஸ்கி ஒரு பில்லியனர் என சமூக வலைத்தளங்களிலும் ரஷ்யா வெளியிட்ட தகவல்களிலும் கூறப்பட்டு வந்தது.

இது உண்மையல்ல என்று தற்போது கூறப்படுகிறது. ஜெலென்ஸ்கி 20 ஆண்டுகளுக்கு மேலாக கலைத்துறையில் நடிகராகவும் நகைச்சுவை கலைஞராகவும் தயாரிப்பாளராகவும் பெரும் வருமானம் ஈட்டியுள்ளார்.

1997ஆம் ஆண்டு அவர் நிறுவிய Kvartal 95 என்ற நகைச்சுவை குழு, பின்னாளில் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக மாறியது. அவரது “Servant of the People” (2015-2019) என்ற தொலைக்காட்சித் தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடரில் ஒரு சாதாரண ஆசிரியர் உக்ரைனின் ஜனாதிபதியாகும் கதாபாத்திரைத்தை ஜெலென்ஸ்கி ஏற்று நடித்திருந்தார்.

தொடர் அவருக்கு புகழை சேர்த்ததோடு பெரும் வருமானத்தையும் ஈட்டித் தந்தது. சொந்தமாக உக்ரைனில் 1 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. கீவ் நகரத்தில் சில கூட்டுறவு சொத்துகள் மற்றும் ஒரு சிறிய வணிக கட்டிடமும் அவருக்கு சொந்தமானதாக உள்ளது.

போரின் காரணமாக உக்ரைனில் தொழில் மற்றும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அவரது வருமானம் மேலும் குறைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Exit mobile version