தேங்காய் எண்ணெய் வாங்கும் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

#image_title

உள்ளூர் சந்தையில் மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றில் (05) அமைச்சர் சமிந்த விஜேசிறி (Chaminda Wijesiri) தேங்காய் எண்ணெய் குறித்து தெரிவித்த விடயத்துக்கு விளக்கமளிக்கையிலேயே தெரிவித்துள்ளார்.

சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயைப் பெற்று உள்ளூர் சந்தையில் விற்பனை செய்வதில் இறக்குமதியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, சில தேங்காய் எண்ணெய் இறக்குமதியார்கள் குறிப்பிட்டளவு வருமானத்தை ஈட்டிய பின்னர் 11 மாதங்களில் செயல்பாட்டை நிறுத்தியுள்ளனர்.

தண்டிக்க நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் திருத்தப்படும். எனவே, மோசடிகளைத் தடுக்க உறுதியான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version