பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத்தாக்குதல் : பலர் பலி

#image_title

பாகிஸ்தானின் (Pakistan) கைபர் பக்துங்வா மாகாணத்தின் உள்ள இராணுவத் தளமொன்றின் மீது நடத்தப்பட்ட இரண்டு தற்கொலை குண்டு தாக்குதலில் 12 பேர் பலியானதுடன், 30 பேர் காயமடைந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதிகளில் உள்ளவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலுக்கு பாகிஸ்தானிய தலிபானுடன் தொடர்புடைய குழுவொன்று பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு பின்னர் குறித்த இராணுவ தளத்துக்குள் நுழைய முயன்ற ஐந்து முதல் ஆறு தாக்குதல்தாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version