பேருந்துகளுக்கு வீதி அனுமதி பத்திரம் வழங்க புதிய நடைமுறை

#image_title

தனியார் பேருந்துகளில் சிசிடிவி கமரா அமைப்புகள் பொருத்தப்பட்டால் மட்டுமே அந்த பேருந்துகளுக்கு வீதி அனுமதி பத்திரம் வழங்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைய தலைவர் பி.டி.விதாரண தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வீதி அனுமதிகளை பெறும்போது பேருந்து உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில நிபந்தனைகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு கமராக்கள் பொருத்துவது அடங்கவில்லை என்றாலும், விரைவில் அதை நிபந்தனைகளின் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

தனியார் பேருந்துகளில் பெண்களுக்கு எதிரான வன்முறையைக் குறைப்பதோடு, பேருந்திலும் அதில் பயணிக்கும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்று தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version