வரி வசூலிப்பு தொடர்பில் ஜனாதிபதி அறிவுறுத்தல்

#image_title

வரி வசூலிப்பு தொடர்பில் ஜனாதிபதி (Anura Kumara Dissanayake) புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

உள்நாட்டு வருமான வரித் துறைக்கு செலுத்த வேண்டிய முழு வரி வருமானமும் வசூலிக்கப்படுவதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். செயலகத்தில் நடைபெற்ற உள்நாட்டு வருமான வரித் துறை அதிகாரிகளுடனான சந்திப்பின் போது அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

ஆண்டுக்கான உள்நாட்டு வருமானத் துறையின் இலக்கு, வருமானத்தை அடைவதற்குத் தேவையான உத்திகள் குறித்து கலந்துரையாடலின் போது விரிவான கவனம் செலுத்தப்பட்டது.  வசூலிக்கப்படாத வருமான வரியை மீட்டெடுப்பதற்கு தற்போதுள்ள வழிமுறைகளை விட அதிக தலையீட்டு அணுகுமுறையின் அவசியத்தை ஜனாதிபதி, இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version