பலவீனமான கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கை

#image_title

பலவீனமான கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கை முன்னணி இடத்தை பிடித்துள்ளது. வீசா இல்லாத பயணத்தை அனுமதிக்கும் நாடுகளில், கடவுச்சீட்டு மிகவும் பலவீனமான நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியுள்ளது. பட்டியலில் இலங்கை 91வது இடத்தில் உள்ளது. சூடான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளும் அந்த இடத்தில் உள்ளன.

வீசா இல்லாத பயணத்தை அனுமதிக்கும் நாடுகளில், சிங்கப்பூரின் கடவுச்சீட்டு மிகவும் மதிப்புமிக்கதாக மாறியுள்ளது. சிறந்த கடவுச்சீட்டு பட்டியலில் ஜப்பான் மற்றும் தென் கொரியா இரண்டாவது இடத்தில் உள்ளன.

சிறந்த கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளில் டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, ஸ்பெயின் இத்தாலி போன்ற நாடுகள் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.

Exit mobile version