கணேமுல்ல சஞ்சீவ விசாரணை! பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை

#image_title

கணேமுல்ல சஞ்சீவ(Ganemulla-Sanjeewa) படுகொலை சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒன்பது சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கை (07) ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலியின் உத்தரவுக்கு அமைய தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தின் பதிவாளருக்கு தலைமை நீதிபதியால் விசாரணை தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்றப் பதிவாளரும் சிறை அதிகாரிகளுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு தெரிவித்துள்ளார்.

தடுப்புக்காவலில் உள்ள சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது ஏற்படக்கூடிய பாதுகாப்பின்மையைக் கருத்தில் கொண்டு நீதவான் இந்த அறிவிப்பை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version