கிரிபத்கொட பகுதியில் உள்ள இரவு விடுதியின் மீது தாக்குதல்

#image_title

கிரிபத்கொட பகுதியில் உள்ள மிகப்பெரிய இரவு விடுதியின் மீது ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வாள்கள் மற்றும் பொல்லுகளை ஏந்திய 7 பேர் கொண்ட குழு வந்து இந்த இரவு விடுதியின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமரா அமைப்புகளையும் அழித்து, தங்கள் உபகரணங்களை அகற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர்களை கைது செய்வதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது.

Exit mobile version