நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா (Ramanathan Archchuna) எதிர்வரும் எட்டாம் அல்லது ஒன்பதாவது மாதம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே குறிப்பிட்டுள்ளார்.
52 வீதம் பெண்கள் இருந்தாலும், பிரதமரின் கூற்று படி நாடாளுமன்றில், வெறும் 9.8 வீதமான பெண்களே இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றில் பெண்களின் எண்ணிக்கையை 10 வீதமாக மாற்றுவதாக கூறிய அவர், தான் பதவி விலகி அந்த பதவியை பெண்ணொருவருக்கு வழங்கப் போவதாக குறிப்பிட்டார்.
பிரதமர் ஹிரிணி அமரசூரிய, யாழ்ப்பாணத்தில் மக்களால் தெரிவு செய்ய்பப்பட்ட சில பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை மறந்து விட்டதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, அவர்களையும் கணக்கில் எடுத்தால் 10 வீதம் தாண்டிவிடும் என்றும் சுட்டிக்காட்டினார்.