ரணில் மீது பாயும் அநுரவின் நடவடிக்கைகள்

#image_title

ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணையை ஆரம்பிக்கும் என்று பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை துணை அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய வட்டகல, படலந்த அறிக்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

விக்ரமசிங்கவின் சமீபத்திய அல் ஜசீரா நேர்காணலிலும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

ரணில் மீது, மத்திய வங்கி பத்திர மோசடி மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

இரண்டு சம்பவங்களும் ரணில் பிரதமராக இருந்த காலத்தில் இடம்பெற்றவையாகும்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படைத்தன்மைக்கு உறுதிபூண்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க முன்னர் அரசியல் பாதுகாப்பைப் பெற்ற அனைத்து குற்றச்சாட்டுகள் மீதும், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் வட்டகல வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version