கிழக்கில் பதுங்கியுள்ளாரா தென்னக்கோன்

#image_title

முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் (Deshabandu Tennakoon) கிழக்கு மாகாணத்தில் மறைந்து இருக்கின்றாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அரசாங்க புலனாய்வுத் துறையினர் சல்லடை போட்டு பல பிரதேசங்களில் கடந்த இரு தினங்களில் தேடுதல் மேற்கொண்டுள்ளனர்.

முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை துப்பாக்கிச் சூட்டு சம்வம் ஒன்று தொடர்பில் சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென்னக்கோன் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டதையடுத்து அவர் தலைமறைவாகியுள்ளார்.

கைது செய்வதற்கு காவல்துறையினர் மற்றும் புலனாய்வுத்துறையினர் தேடிவருகின்றனர்.

நீதிமன்ற உத்தரவின் பின்னர், தேசபந்து தென்னகோன் தலைமறைவாகியுள்ளதையடுத்து அவரை கைது செய்ய அண்மைய நாட்களாக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வந்த போதிலும் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன.

அவர் கிழக்கு மாகாணத்தில் மறைந்திருக்கின்றாரா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சந்தேகிக்கப்படும் பிரதேசங்களில் புலனாய்வுத்துறையினர் தேடுதல் நடாத்தியுள்ளனர்.

கிழக்கில் மறைந்திருப்பதற்கான எந்தவிதமான அறிகுறிகள் இதுவரை கிடைக்கவில்லையென புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version