யாழிலிருந்து நாடுகடத்தப்பட்ட 15 வெளிநாட்டவர்கள்

#image_title

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளை மீறி சுற்றுலா விசாக்களின் கீழ் நாட்டிற்கு வருகைதந்துள்ள 15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தால் இலவசமாக வழங்கப்பட்ட சுற்றுலா விசாக்களின் கீழ் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் எனவும், யாழில் மதப் பிரசாரப் பணியிலும் தளபாடங்களில் சிற்ப வேலைப்பாடு செய்யும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவர் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் 5 மற்றும் 7 ஆம் திகதிகளில் நோய் குணமாக்கும் மத சேவையை நடத்தத் தயாராகி வந்திருந்த நிலையில், இதற்கு எதிராக இந்து தேசியவாத அமைப்புகள் போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்திருந்தன.

கைது செய்யப்பட்ட இரு மத குருமார்களையும் நேற்று (08) அதிகாலை இந்தியாவின் சென்னைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள ஒரு தளபாடங்கள் செய்யுமிடத்தில் சிற்ப வேலை செய்து கொண்டிருந்த 8 இந்தியப் பிரஜைகளும், உணவகங்களில் பணிபுரிந்த 5 இந்தியப் பிரஜைகளும் நேற்று கைது செய்யப்பட்டு பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு நாடு கடத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version