சுவிட்சர்லாந்தை கறுப்பு பட்டியலில் சேர்த்த அமெரிக்கா

#image_title

அமெரிக்கா (United States) சுவிட்சர்லாந்தை (Switzerland) கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதாக தெரிவித்து சுவிட்சர்லாந்தை அமெரிக்கா கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் பொருளாதார விவகாரங்களுக்கான மாகாணச் செயலக இயக்குநரான ஹெலன் பட்லிகர் ஆர்டிடா (Helene Budliger Artieda) தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து, “positive balance of trade” என்னும் நிலையிலிருப்பதாலேயே அமெரிக்கா சுவிட்சர்லாந்தை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இறக்குமதியை விட அது ஏற்றுமதி செய்யும் பொருட்களின் அளவு அதிகமாக இருந்தால், அது “positive balance of trade“ என அழைக்கப்படும்.

அந்த நாடு இறக்குமதிக்காக செய்யும் செலவைவிட, ஏற்றுமதி மூலம் அதிக வருவாய் பார்க்கிறது என்று அர்த்தம்.

காரணத்தினால்தான் அமெரிக்கா சுவிட்சர்லாந்தை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாக ஹெலன் தெரிவித்துள்ளார்.

நியாயமற்ற வர்த்தகம் செய்வதாக சுவிட்சர்லாந்தை குற்றம் சாட்டமுடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version