உலகம்

பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை குறித்து தகவல்

பாப்பரசர் பிரான்சிஸுக்கு நிமோனியாவால் உயிர் ஆபத்து இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை பெறுவதற்காக அவரை இன்னும் பல நாட்கள் மருத்துவமனையில் வைத்திருக்க முடிவு செய்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலையாக இருப்பதாகவும், அண்மைய நாட்களில் ஒருங்கிணைந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

2025, பெப்ரவரி 14ஆம் திகதி அன்று சிக்கலான நுரையீரல் தொற்று காரணமாக ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டார்.

நாட்பட்ட நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு, இளம் வயதிலேயே நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்ட 88 வயதான பாப்பரசர், கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மூச்சுக்குழாய் அழற்சியின் மோசமான நிலையைக் கொண்டிருந்தார்.

சிக்கலான சுவாசக்குழாய் தொற்று மற்றும் இரட்டை நிமோனியாவாக மாறியது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *