சாகலவின் வீட்டில் தேசபந்துவை தேடிய பொலிஸார்

#image_title

முன்னாள் அமைச்சர் சாகல ரட்நாயக்கவின் வீட்டில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மறைந்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாகல ரட்நாயக்கவின் மாத்தறை மொரவக்க பகுதியில் அமைந்துள்ள வீட்டில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இரவு குறித்த வீட்டை பொலிஸார் தீவிரமாக சோதனையிட்டுள்ளனர். குறித்த சோதனையின் போது தேசபந்து தென்னக்கோன் அந்த இடத்தில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டை பரிசோதனை செய்ய தம்மிடம் அனுமதி கோரியதாகவும் அதற்கு தாம் அனுமதி வழங்கியதாகவும் முன்னாள் அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். தேசபந்து தென்னக்கோனை கண்ட இடத்தில் கைது செய்வதற்கு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version