கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்ட இளைஞனின் சடலம்

#image_title

ஹம்பாந்தோட்டை, அங்குணுகொலபெலஸ்ஸ – அபேசேகரகம வீதியில் கீரியகொடெல்ல சந்திக்கு அருகிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இளைஞன் கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவர் 23 வயதான அபேசிங்க விஜேநாயக்க சந்தீப லக்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மர்ம மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version