மருத்துவர்கள் சொன்னாலும் மதுபானம் என்பதும் உணவாகும்

#image_title

மருத்துவர்கள் என்ன சொன்னாலும் மதுபானம் என்பதும் ஓர் உணவு வகையாகும் என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் விடயத்தை தெரிவித்துள்ளார்.

அரிசி சார்ந்த சில துணை உற்பத்திகள் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரிசி இந்த நாட்டின் முக்கிய பயிராக இருப்பதால், அதைப் பயன்படுத்தி பல துணை உற்பத்திகள் செய்யப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரிசியில் பெறுமதி சேர்க்கப்படக்கூடிய வகையில் பிஸ்கட், கேக் மட்டுமல்லாது மது உற்பத்தியும் செய்ய வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மதுபானம் ஒரு பகுதியினருக்கு உணவாகும் என்பதால், மருத்துவர்களின் கருத்துக்களை பொருட்படுத்தாமல் இதனை பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version