ட்ரூடோவின் நெகிழ்ச்சி காணொளி

#image_title

பதவியின் கடைசி நாளில், கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மக்களுக்கான இறுதிச் செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளார். செய்தியை அவர் காணொளி வடிவில் தனது ‘X’ தளத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

‘ஹேய் கனடா! இறுதியாக ஒரு விடயம்’ என ஆரம்பிக்கும் குறித்த பதிவில்,

“கனேடியர்கள் மற்றும் அவர்கள் ஒருவரையொருவர் எவ்வாறு ஆதரிக்கிறார்கள் என்பது குறித்து பெருமைப்படுகின்றேன்.

தான் எப்போதும் பெருமையுடன் கனடியனாக இருப்பேன். உலகில் என்ன நடந்தாலும் எமது மக்கள் அப்படியே இருப்பார்கள் என்று நம்புகின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடோ நாளை அதிகாரபூர்வமாக பதவி விலகி, புதிய அரசாங்கத்தை அமைக்க மார்க் கார்னியை பரிந்துரை செய்யவுள்ளார்.

மார்க் கார்னி கனடாவின் 24 வது பிரதமராக பதவியேற்கவுள்ளதோடு ஒரு சிறிய அமைச்சரவையையும் அமைப்பார்.

Exit mobile version