ஹிந்தி திணிப்பு பற்றிய பிரச்சனை தேசிய அளவில் பேசப்படும் விஷயமாக இருந்து வருகிறது. பிரபலங்களும் கூட பலரும் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் பற்றி தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் பேசி இருக்கிறார். தற்போது ஆந்திராவின் துணை முதலமைச்சராக இருக்கும் அவர் தமிழர்களை தாக்கி பேசியுள்ளார். “தமிழ்நாட்டில் ஹிந்தி எங்களுக்கு வேண்டாம் என சொல்கிறார்கள். ஹிந்தியை திணிப்பதாக சொல்கிறார்கள். அப்போது முதலில் உங்கள் படங்களை ஹிந்தியில் டப் செய்வதை நிறுத்துங்கள், வடக்கில் இருந்து டெக்னீஷியன்களை இங்கே கொண்டு வராதீர்கள்.. ஹிந்தி மக்கள் பணம் மட்டும் வேணுமா” என கேட்டிருக்கிறார்.