வானியலாளர்கள் சனி கிரகத்தை சுற்றி 128 புதிய நிலவுகளைக் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில் இது தொடர்பில் ஆராய்ச்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
தாய்வான், கனடா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வானியலாளர்கள் இந்த ஆராய்ச்சியை முன்னெடுத்திருந்தனர். சூரியக் குடும்பத்தில் நிலவுகளின் எண்ணிக்கையில் சனிக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
‘நிலவுகளின் அரசன்’ என்ற பட்டம் வியாழனுக்கே சொந்தமாக இருந்தது. ஆனால் தற்போது, சனியின் மொத்த நிலவு எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது. மற்ற அனைத்து கிரகங்களின் நிலவுகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.