இலங்கைவிளையாட்டு

சீன வீரரை வீழ்த்தி செஸ் சம்பியன் பட்டத்தை தட்டித் தூக்கிய தமிழன்!

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் தொடரின் வெற்றியாளர் பட்டத்தை இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் தனதாக்கிக் கொண்டார்.

நடப்பு செம்பியனான சீனாவின் டிங் லிரென்குடன் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் அவர்  வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளார்.

13 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்று  இதனால், இருவரும் தலா 6½ புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தார்கள்.

இதில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடி சீன வீரரை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

58 ஆவது காய் நகர்த்தலுக்குப் பிறகு டிங் லிரென் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.

இதனால் 18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று குகேஷ் சாதனைப் படைத்துள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *