ஹொரணை பிரதேசத்தில் உள்ள ஓய்வு விடுதி ஒன்றில் கண்ணாடி போத்தலால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரணை பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹொரணை பிரதேசத்தில் வசிக்கும் முச்சக்கரவண்டி சாரதி ஆவார்.
மொரகஹஹேன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே காயமடைந்துள்ளார்.
காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மதுபானம் அருந்துவதற்காக ஹொரணை பிரதேசத்தில் உள்ள ஓய்வு விடுதி ஒன்றிற்கு நேற்று புதன்கிழமை (18) சென்றுள்ளார்.
இதன்போது சந்தேக நபரான முச்சக்கரவண்டி சாரதிக்கும் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, கண்ணாடி போத்தல் ஒன்றினால் பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.