பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களையும், விவசாயிகளையும் சந்தித்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், ராகுல் என்ற சிறுவனை பற்றி பேசியுள்ளார். பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சந்திப்பதற்கு அனுமதி அளித்த காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்நிலையில், கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவித்த விஜய் பேசுகையில், “உங்களுடைய போராட்டத்தை பற்றி ராகுல் என்ற சிறுவன் பேசியதை கேட்டு நான் இங்கு வந்துள்ளேன். கிட்டத்தட்ட 910 நாட்களுக்கு மேலாக நடக்கும் போராட்டம் குறித்து சிறுவன் பேசியதை கேட்டவுடன் ஏதோ செய்தது. இந்த விடயத்தில் என்னுடைய முழு ஆதரவு உங்களுக்கு உண்டு.
நாட்டிற்கு முக்கியமான உங்களை போன்ற விவசாயிகளை காலடி மண்ணை தொட்டு தான் என் பயணத்தை தொடங்குகிறேன்” என்றார்.
விஜய் குறிப்பிட்ட ராகுல் என்ற சிறுவன் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேட்டி அளித்துள்ளார்.சிறுவன் அளித்த பேட்டியில், “எங்களுக்கு விமான நிலையம் வேண்டாம். விவசாய நிலம், ஏரிகள், பள்ளிகள் மட்டுமே போதும். விமான நிலையம் வந்தால் நாங்கள் என்ன மேலேயே பறக்க போகிறோம். விமான நிலையம் வந்தால் பள்ளி பாதிக்கப்படுகிறது. அவங்க பசங்க மட்டும் படிக்கனுன்னு நினைக்கிறாங்க. நாங்கள் படிக்க வேண்டாமா? ஏரி இருந்தால் தான் வெயில் காலத்தில் நாங்க இங்க வந்து குளிப்போம்” என்று பேசினார்.