உலகம்

ட்ரம்பின் வெற்றியைப் பறித்தார்கள்… உக்ரைன் போர் தடுக்கப்பட்டிருக்கும்: புடின்

2020 ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பின் வெற்றியைப் பறிக்காமல் இருந்திருந்தால், இன்று உக்ரைன் போர் நடந்திருக்க வாய்ப்பில்லை என ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய செய்தி ஊடகம் ஒன்றில் பேசியுள்ள புடின், தாம் ஜனாதிபதி ட்ரம்பை சந்திக்க ஆவலாக இருக்கிறேன் என்றார். மூன்றாண்டுகளாக நீடிக்கும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டியது குறித்து ட்ரம்புடன் விவாதிக்க தயார் என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு சதிச்செயலின் தொடக்கமாக இருக்கலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். இருப்பினும், ட்ரம்பை அதிகமாக புகழ்ந்துள்ள புடின், அவர் ஒரு புத்திசாலி நபர் மட்டுமல்ல, ஒரு நடைமுறை சார்ந்த நபர் என்றும் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார். போருக்கு காரணமான புடின், தற்போது ட்ரம்பின் தேர்தல் வெற்றி களவாடப்பட்டுள்ளது, இல்லையெனில் உக்ரைன் போர் நடந்திருக்காது என கூறுவதெல்லாம், வெறும் ஏமாற்று வேலை என்றே ஜெலென்ஸ்கி பதிலளித்துள்ளார்.

ட்ரம்பின் முடிவை தமக்கு சாதகமாக மாற்றும் நடவடிக்கைகளில் புடின் இறங்கியுள்ளார் என்றே ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். ட்ரம்பிடம் இனி ரஷ்யாவின் நரித்தனம் விலை போக வாய்ப்பில்லை என்பதில் தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். 2022 பிப்ரவரி இறுதியில் உக்ரைன் மீது படையெடுப்பை நடத்திய புடின், தற்போது உலகத் தலைவர்களை ஏமாற்றி, போரை மீண்டும் தொடரவே நாடகமாடுகிறார் என ஜெலென்ஸ்கி சாடியுள்ளார்.

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யாவுக்கு புறப்படவும் தாம் தயார் என ட்ரம்ப் தெரிவித்ததை அடுத்தே புடின் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் போர் தொடர்பில் கடும் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப், உக்ரைனில் படுகொலை நடப்பதாகவும், உண்மையில் அந்தப் போரை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.ஒப்பந்தம் மேற்கொள்ள ரஷ்யா தயாராகவில்லை என்றால், தடைகள் மற்றும் வரி விதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *