உலகம்

அமெரிக்காவிற்கு எதிராக சீனா

அமெரிக்கா(USA) விதித்த வரி விதிப்புகளுக்கு எதிராக பதிலடியை வழங்குவோம் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவிற்கு எதிராக உலக வர்த்தக சபையில் முறையிட்டு வழக்கு தொடர்வோம் என்றும் சீனா(China) எச்சரித்துள்ளது.

டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) பதவியேற்றதை தொடர்ந்து சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை அதிக வரி விதிக்கும் நாடுகள் எனவும், இந்த நாடுகள் மீது நாங்கள் கூடுதல் வரிகளை விதிக்கப் போகிறோம், இந்த நாடுகள் பொதுவாக எங்களுக்கு தீங்கு விளைவிக்கும் நாடுகள் என குறிப்பிட்டிருந்தார். முதற்கட்டமாக சீனா மீது 10% வரியை ட்ரம்ப் விதித்துள்ளார். இந்நிலையிலேயே சீனா இவ்வாறான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

டொலர் வர்த்தகத்தில் இருந்து வெளியேற நினைத்தால், டொலர் வர்த்தகத்தை குறைத்தால் 100% வரி விதிப்பை மேற்கொள்வோம் என அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கனடா, மெக்சிகோ மீது ட்ரம்ப் விதித்த 20% வரி இந்த 1ஆம் திகதியுடன் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் சீனா மீதான வரியை அடுத்த வாரம் அறிவிப்பார் என்றும் அதன்பின் இந்தியா மீதான வரியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *