உலகம்

ட்ரம்ப் வரவால் கலக்கத்தில் உலக நாடுகள்

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதுமே, ஜனாதிபதியானால் என்ன செய்யப்போகிறாரோ என கலங்கிய நாடுகள் உண்டு.ஜனாதிபதியாக பதவியேற்றதும் கனடா, மெக்சிகோ, சீனா போன்ற சில நாடுகள் மீது கடுமையான வரிகள் விதிக்கப்போவதாக கூறியுள்ளார் ட்ரம்ப்.

ட்ரம்ப் என்னென்ன வரிகள் விதிக்கப்போகிறார், எவ்வளவு வரிகள் விதிக்கப்போகிறார் என்பது குறித்த கலக்கம் பல நாடுகளுக்கு உள்ளது. ஜேர்மனியும், அதற்கு விதிவிலக்கல்ல என்றே தோன்றுகிறது.

ஜேர்மனியின் துணை சேன்ஸலரும், அடுத்த சேன்ஸலராகக்கூடும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுபவருமான ராபர்ட் ஹாபேக் (Robert Habeck), ட்ரம்பின் வரிவிதிப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியமும் ஜேர்மனியும் ஒன்றிணைந்து நிற்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

ட்ரம்ப் வரிகள் விதிப்பாரானால் ஐரோப்பாவும் பதிலுக்கு அமெரிக்க பொருளாதாரத்தை பாதிக்கும் அளவில் அமெரிக்கா மீது வரிகள் விதிக்கலாம் என்று கூறியுள்ள ராபர்ட், ஆனால், தனது பார்வையில் அது ட்ரம்பை எதிர்கொள்ள தவறான வழிமுறையாகும் என்று கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் ஒன்றிணைந்து அமெரிக்காவுடன் கைச்சண்டை போடலாம், ஆனால், அது இரு தரப்புக்குமே பலனளிக்காது என்று கூறியுள்ள ராபர்ட், அப்படி ஒரு சூழலை தவிர்க்கவே தான் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவிலும் ஜேர்மனியிலும் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும், எதிர்கால தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கும், காலாவதியான உள்கட்டமைப்பை புத்துயிர் பெறுவதை உறுதிசெய்யவும் அதிக வரிச் சலுகைகள் மற்றும் முதலீடுகள் தேவை என்னும் வாதத்தை முன்வைத்துள்ளார் ராபர்ட்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *