இரண்டு வாரங்களுக்குள் தேங்காய் விலை நிச்சயமாகக் குறைவடையும் என தேங்காய் மேம்பாட்டு அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணதுங்க (Shantha Ranatunga) தெரிவித்துள்ளார். ஹிரு பலய அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் தேங்காய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, இன்னும் 2 வாரங்களில் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது 250 ரூபாவாக உள்ள ஒரு தேங்காய் விலை, எதிர்காலத்தில் 180 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை குறைவடைய வாய்ப்புள்ளதாகவும் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு, இந்தோனேசியாவில் இருந்து தேங்காய் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து தேங்காய் உற்பத்தி பொருட்களான தேங்காய் தூள் மற்றும் தேங்காய் பால் என்பவற்றை இறக்குமதி செய்யும் அமைச்சரவை அனுமதிப் பத்திரம் இருப்பதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார். தேவையை பொருத்து, குறித்த தேங்காய் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய உற்பத்தியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.