உலகம்

டொலரில் கை வைத்தால் நூறு வீத வரி : ட்ரம்பின் எச்சரிக்கை

டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), அமெரிக்க டொலருக்கு பதிலாக மற்றொரு நாணயத்தை உருவாக்கவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது என இந்தியா (India) உள்ளிட்ட பிரிக்ஸ் உறுப்பு நாடுகளை எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு மாறாக செயல்படும் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் புதிதாக எந்த நாணயத்தையும் உருவாக்கக் கூடாது. ஏற்கனவே, இருக்கும் வேறு நாட்டு நாணயத்தையும் பயன்படுத்த கூடாது. சர்வதேச வியாபாரங்களுக்கு பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டொலரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மாற்ற நினைக்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படும். அவர்களுக்கு வேறொரு ஏமாளி கிடைத்தால் அவர்களுடன் வியாபாரம் செய்யட்டும். டொலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உள்ள உறவையும் துண்டித்துக் கொள்ளுங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *